#BREAKING:: தீயாய் பரவும் கொரோனா.. பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்தது..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதை அடுத்து கொரோனா பரவல் அதிகம் உள்ள 3 மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35,199 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,814 என பதிவான நிலையில் இன்று 35,199 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 12,438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 369 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் 1703 என இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க தொடங்கியதால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என்றும் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona infected cases in India has crossed 35 thousand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->