பீகாரில் இருந்து குழந்தைகளை வாங்கிவந்து தமிழ்நாட்டில் விற்ற தம்பதிகள் கைது!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் வறுமையில் வாழும் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதாக வாங்கிக்கொண்டுவந்து விலைக்கு விற்றுவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகளை தமிழ்நாடு கலவல்துறை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருடைய மனைவி அஞ்சலிதேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வந்தனர். இதற்கிடையே பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக மகேஷ் குமார் மற்றும் அவரது மனைவி அஞ்சலிதேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஆண் குழந்தை ஒரு மற்றும் ஒரு பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கிய திம்மநாயகன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது அஞ்சலிதேவியின் தாயார் பூனம்தேவி மற்றும் தங்கை மேகாகுமாரி ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அவர்கள் பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திலிருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்காக வாங்கி வந்து 5 லட்சம் வரை பேரம் பேசி கடைசியாக 2 லட்சம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் தேதி மற்றும் மேகாகுமாரியை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple who bought children from Bihar and sold them in Tamil Nadu arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->