பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்ற தம்பதியினர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!!
couples arrested for kill girl baby in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஜல்னா மாவட்டம் அசர்கேடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 12-ந்தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், குழந்தையைக் கொன்று கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வக்ரி வாட்காவ் தண்டா கிராமத்தில் சதீர்பவார்-பூஜா பவார் தம்பதியின் பெண் குழந்தை சமீபத்தில் காணாமல் போனதை போலீசார் கண்டறிந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த தம்பதி தாங்கள் பெற்ற குழந்தையை கொன்று கிணற்றில் வீசியதும், ஏற்கனவே தங்களுக்கு ஒரு மகள் இருப்பதால், மற்றொரு பெண் குழந்தையை வளர்க்க விருப்பமின்றி இந்த செயலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதன் படி போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
couples arrested for kill girl baby in maharastra