கோவாவில் காதலர் தினம் கொண்டாடச் சென்ற காதல் ஜோடி.! கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் விபு சர்மா, சுப்ரியா துபே என்ற காதல் ஜோடி. இவர்களில் விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

பெற்றோருக்குத் தெரியாமல் காதலித்து வந்த இவர்கள், காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு கோவா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அறை எடுத்து தங்கி பல்வேறு சுற்றுலா தளங்களுக்குச் சென்றுள்ளனர். 

இந்த நிலையில், இவர்கள் காதலர் தினம் நேற்று கோவாவில் உள்ள பலோலம் கடற்கரையைச் சுற்றி பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர் பாரத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். 

இதைப்பார்த்த பிற காதல் ஜோடிகள் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அதன் பின்னர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கிய இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples died in goa palelom beach for valentines day celebrate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->