கடனால் மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.!
couples sucide in madhyapradesh
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டம் பினா நகரில் உள்ள நந்தன் காலனியை சேர்ந்த பல்பீர் என்பவர் குர்வாயில் உள்ள சமூக சுகாதார மையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மஞ்சு, பினா சிவில் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இந்த தம்பதியினரின் மகன் வெளியூரில் படித்து வருகிறார். இதற்கிடையே பல்பீர் பண பற்றாக்குறை காரணமாக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதனைக் கட்ட இயலாத பல்பீர் தனது மனைவியுடன் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பல்பீரின் மகன் வார விடுமுறைக்காக இன்று காலை தனது வீட்டிற்கு வந்தபோது தனது பெற்றோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், மஞ்சு விஷம் அருந்தி அல்லது விஷ ஊசி செலுத்தி இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. பல்பீரின் அறையில் தற்கொலைக்கான குறிப்பு ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில், நிலுவையில் உள்ள கடன் குறித்து இருவரும் கவலையடைந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
couples sucide in madhyapradesh