சிறையில் உள்ள மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


சிறையில் உள்ள மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி.!

டெல்லியில் உள்ள மண்டோலி, சிறையில் இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது உள்பட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடிகளுக்கு எல்லாம் உடந்தையாக இருந்த அவரது மனைவி லீனா பால் மண்டோலி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.

இந்த நிலையில் லீனா பாலுக்கு பிறந்த நாள் வருவதால் அவருக்கு கேக் வாங்கி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சைலேந்தர் மாலிக், "மனைவியின் பிறந்த நாளுக்கு சிறை பேக்கரியில் இருந்து கேக் வாங்கி கொடுக்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த கேக்கை சிறை அதிகாரி லீனாவிடம் இன்று ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரர், குடும்பத்தினருடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த மனுவில் சட்ட அம்சங்களை விட மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மனைவியின் பிறந்தநாளுக்கு சிறை பேக்கரியில் கேக் வாங்கும் சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court permission to sukesh chandrasekar buy cake in jail bakkery for wife birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->