'ஐ லவ் யூ' பாலியல் தொல்லை அல்ல: நீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான இளைஞர்..! - Seithipunal
Seithipunal


லவ் யூ என்பது பாலியல் தொல்லை அல்ல என்று மும்பை சிறப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம்,மும்பையில் வசிக்கும்  22 வயது இளைஞர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று 'ஐ லவ் யூ' என தனது காதலை அவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அந்த மாணவியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து, காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு நிகழ்வில் ஒருவரிடம் மற்றொருவர் 'ஐ லவ் யூ' என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது குற்றமல்ல. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவதுதான் சட்டப்படி குற்றம்.  

குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்யவில்லை என தெரிகிறது. மேலும், அந்த இளைஞரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court Release the youth Who said love you to a girl


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->