குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது தவறல்ல! அதிர்ச்சி கிளம்பிய நீதிமன்றம்! அடுத்து நடந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது என கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பளித்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்றாட வாழ்வில் தற்போதைய கால சூழ்நிலையில் செல்போன் தேவை மிக மிக அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் செல் போன் பயன்படுத்தினால் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கூட அவர்களை உணவு சாப்பிட வைப்பதற்காக அவர்களுக்கு செல்போனை காட்டு தான் உணவு ஊட்டும் நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை வேதனைக்குரிய உண்மை.

இணையதளத்தின் மூலம் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 18 தேதி இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தகவல் தொழில்நுட்பச் சட்டம்  (2000) பிரிவு 67b படி (குழந்தைகளுக்கு எதிரானவற்றை உருவாக்குதல் பரப்புதல் ) சட்டத்தின் படி குழந்தைகளிலன் ஆபாச படங்களை பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியது. சமூக வலைதளங்களில் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முந்தைய தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்த நீதிமன்றம், இங்கு இருப்பவர்கள் அனைவரும் மனிதர்கள் தான். எங்கள் தரப்பிலும் தவறுகள் நடப்பது சகஜம்தான். தவற்றை திருத்திக்கொள்ள எப்போதும் சந்தர்ப்பம் உள்ளது. தவறாக வாசிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை திரும்பப் பெறுவதோடு வழக்கில் புதிய தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court reverses verdict decriminalizing viewing of child pornography


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->