பிப். 14 பசு கட்டிப்பிடிப்பு தினமா? வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்.. பேக் அடித்த நலவாரியம்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் பிப். 14-ஆம் தேதி உலகம் முழுதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த காதலர் தின நாளானது காதலர்களுக்கு மிகவும் கொண்டாட்டம் மிக்க நாளாக இருக்கும். இருப்பினும், காதலனோ, காதலியோ இல்லாதவர்களுக்கு அது மிகவும் துயரம் மிகுந்த நாளாக இருக்கும். 

இந்தியாவில், கடந்த சில வருடங்களாகவே காதலர் தினத்தில் சிலர் அநாகரிகமான முறையில் சினிமா தியேட்டர் வாசல், பார்க், பீச் போன்ற இடங்களில் காதலர்களை துன்புறுத்தி வருவது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களாக வெளியாவது வழக்கம்.

இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற விலங்குகள் நல வாரியமானது இந்த பிப். 14-ஆம் தேதியை Cow Hug Day (பசு கட்டிப்பிடிப்பு தினம்)- ஆக கொண்டாட பொதுமக்களை வலியுறுத்தியது.

அதில், நம் நாட்டின் பின் புலமாக மாடுகள் இருப்பதாகவும், எனவே அவற்றை  தாயாக நினைத்து கட்டிப்பிடித்து தொழ வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையில் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. இதையடுத்து, இதை கைவிடுவதாக மத்திய விலங்குகள் நல வாரியம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cow Hug Day announcement withdrawed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->