சீதாராம் யெச்சூரியின் உடல்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம்!  - Seithipunal
Seithipunal


மறைந்த மார்க்சிஸ்ட் கம்னியூஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிஉடல்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நல நுரையீரல் தொற்று காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72.

சீதாராம் யெச்சூரி மறைவிற்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரின் இழப்பை எண்ணி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், சீதாராமன் யெச்சூரியின் உடலை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீதாராம் யெச்சூரி, கடந்த 1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் பிறந்தாலும், அவரின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் "யெச்சூரி" என்பதை அவரின் பெயரின் பின்னால் அடையாளமாக சேர்த்துக் கொண்டார். 

ஆந்திரா, டெல்லியில் தனது பள்ளி படிப்பை முடித்த சீதாராம் யெச்சூரி, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பை பயின்றார்.

தொடர்ந்து டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்த சீதாராம் யெச்சூரி அரசியலில் களமிறங்கினர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி (அவசரநிலை) பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Sitaram Yechury


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->