க்யூட் பி.ஜி தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கியூட் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.

மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

அதில் மொத்தமாக 9,68,201 மாணவர்கள் கலந்து கொண்டதாக தேசிய தேர்வு மையத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில உட்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடந்து முடிந்தது.

இந்த நிலையில் கியூட் பிஜி தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CUET PG exam results today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->