மணிப்பூரில் 3 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்வு.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடைபெற்று 77 நாட்களுக்க பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் குழு இம்பால் மாவட்டத்திற்கு சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு இம்பால் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் "02.08.2023 அன்று பிறப்பித்துள்ள உத்தரவின் படி, 03.08.2023 முதல் காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகிறது. இந்த ஊர் அடங்கு ரத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்த உத்தரவிடப்படுகிறது.

மேலும் சுகாதாரம், மாநகரசபை அதிகாரிகள்,  ஊடகவியலாளர் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் போன்ற அத்தியாவசிய சேவையைச் சேர்ந்த சகல நபர்களும் இந்த ஊரடங்கு தளர்வு நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curfew relaxed in Manipur after 3 months


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->