தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த சி.பி.ஐ.!
Customs Department officers dismiss in kozhikodu airport
தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த சி.பி.ஐ.!
கேரள மாநிலத்தில் உள்ள உள்ள சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன. குறிப்பாக இந்தியாவிலேயே அதிக அளவில் கேரளா மாநிலத்தில் தான் தங்கம் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுப்பதற்காக சுங்கத்துறையினரும், வருவாய் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தங்கம் கடத்தல் குறையவில்லை. இதற்கிடையே இந்த தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் படி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கோழிக்கோடு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் சிக்கின கொண்டனர். அவர்கள் மீது இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்க கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கூடுதல் நடவடிக்கையாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
Customs Department officers dismiss in kozhikodu airport