மக்களே உஷார் - அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் - சைபர் கிரைம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று மாநில சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

சமீப காலமாக 'ஜிப்லி' செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால் இதில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. 'ஜிப்லி' வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. அதில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.

இந்த அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பொதுமக்கள் 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை 'டீப் பேக்கு'களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. 

'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், ஒருவர் செல்போன் செயலிகளுக்குள் செல்லும்போது, அவரது கைப்பேசியும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் உள்ளது.

அதனால், பொதுமக்கள் இப்படிப்பட்ட இணையத்தளங்களையும், செயலிகளையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையத்தளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடியினால் பாதிக்கப்பட்டால் '1930' என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cyber crime police warning no post unauthorized apps


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->