ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
Cyclone Rimal and heatstroke Modi advises
பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு விவகாரங்களை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதில் ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தபடி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் வரை நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமாரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாள் தியானம் செய்தார். நேற்று மாலை தியானத்தை முடித்துவிட்டு திருவள்ளூவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி தியானம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. மக்களவை தேர்தல்களுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதனமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. இந்திலையில், இந்தியாவின் வாட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கத்தால் 61 பேர் உயிர் இழந்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளிட்டுருந்தார். அறிக்கையை வாசித்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆந்திராவின் தென்மேற்கு திசையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது புயலாக மாறியது. புயலுக்கு இந்திய வானிலை மையம் ரீமால் என பெயரிட்டது. ரீமால் புயலால் மேற்குவங்கத்தில் 7க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அசாம் ,மேற்கு வங்கம் போன்ற மாநிலங்ககளில் ரீமால் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்தும் உலக சுற்றுச்சூழல் தினத்தை பெரிய அளவில் கொண்டதுக்கான ஏற்பாடுகள் குறித்தும் மக்களவைத் தேர்தல் பாஜக ஆட்சியை அமையும் பட்சத்தில் அடுத்த நூறு நாட்கள் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Cyclone Rimal and heatstroke Modi advises