மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த 7-வது ஊதியக்குழு பரிந்துரை செய்திருந்தது. இது தொடராக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 3 விழுக்காடு அளவிற்கு உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

ஏற்கனவே 31 சதவீதம் பெற்று வரும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.

இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும், 47.68 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DA increased for central govt employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->