போலீசை முந்தி சென்ற தலித் தூய்மை பணியாளர்! காவல் நிலையம் அழைத்து சென்று சித்தரவதை செய்த போலீஸ்!
Dalit sanitation worker was beaten up by the police for overtaking a police vehicle in Madhya Pradesh
மத்திய பிரதேசத்தில் காவல்துறை வாகனத்தை முந்தி சென்ற தலித் தூய்மை பணியாளரை காவலர்கள் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பட்டியல் இனத்தவர் மீது நடைபெறும் ஜாதியே ரீதலான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவரை ஜாதி ரீதியாக சில மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதாக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி என்பவர் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,வேலை முடித்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது காவல்துறை வாகனத்தை முந்தி சென்றேன். இதனை அடுத்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டிசென்றதாக என்னை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Dalit sanitation worker was beaten up by the police for overtaking a police vehicle in Madhya Pradesh