ரூ.1,500.,க்கு பெண் வாயில் சிறுநீர் கழித்த நபர்! பீகாரில் நடந்த கொடுமை ! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் தலைநகர் பாட்னா மாவட்டத்தில் குஷ்ருபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டியலின பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, தாக்கப்பட்டு, வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில் "எனது கணவர் பிரமோத் சிங் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 1500 ரூபாய் கடன் வாங்கினார். 

அந்த பணத்தை நாங்கள் வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில் பிரமோத் மற்றும் அவருடைய மகன் எங்களைத் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். இதனால் என்னை தூக்கிச் சென்று நிர்வாணப்படுத்தி தாக்கியதோடு பிரமோத் அவரது மகனை அழைத்து வாயில் சிறுநீர் கழிக்க சொல்ல அவரு அதை செய்து கொடுமைப்படுத்தினார். அவர்களிடமிருந்து ஒரு வழியாக தப்பித்து வந்தேன்" என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குற்றவாளிகளான பிரமோத் மற்றும் அவருடைய மகன் அன்சு சிங் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்களைப் பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் ராஜூ மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

மணிப்பூர் கலவரத்தின் போது கூகி இன பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அதே பாணியில் பீகாரில் அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dalit woman harassment for RS1500 loan in Bihar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->