திருப்பதி கோவிலில் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் தினமும் 15000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை முதல் 28ம் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.

அதேபோல் திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீகோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Darshan tickets for next month will be released today at Tirupati Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->