கேரளாவை உலுக்கிய சிறுமியின் கொலை!! குற்றவாளிக்கு மரண தண்டனை.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கொச்சியில் வெளி மாநில தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகாரை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி ஐந்து வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்பாக் ஆலம் என்பவர் ஜூஸ் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிறகு கொலை செய்தார். 

கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் கோணிப்பையில் கட்டப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியான அஷ்பாக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சோமன் அஷ்பாக் ஆலமுக்கு மரண தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 109 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death sentence to who sexually assaulted and murdered the girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->