தீபாவளி பண்டிகை || 32 கூடுதல் ரெயில் - ரெயில்வே அமைச்சகம் தகவல்..!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தீபாவளி மற்றும் சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கின்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் மக்களின் கூட்டம் குவிகிறது. பண்டிகை காலத்தில் உடுத்த புது ஆடை, பலகாரம் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதேபோல், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அவர்களின் பயணங்களில் சிரமம் இல்லாமல் செல்வதற்கு கூடுதல் ரெயில் சேவைகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து இந்திய ரெயில்வே அமைச்சகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்த பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. 

இதற்கு முன்பு, 179 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட இந்த 32 ரெயில் சேவையையும் சேர்த்து மொத்தம் 211 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்படும். இதன்படி, 2,561 முறை இந்த ரெயில் சேவை இயங்கும். அதேபோல், நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளை இந்த சிறப்பு ரெயில்கள் இணைக்கும் வகையில் ரெயில் சேவை திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali festival 32 extra train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->