டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: 3ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள், சுரங்க பாதைகள் என வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் தண்ணீரில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

டெல்லி விமான நிலையத்தில் டெர்மினல் 1 ல் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கன மழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்து உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளின் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் டெர்மினல் ஒன்றிலிருந்து விமான போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi airport roof collapses accident 3 dead


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->