கெஜ்ரிவாலுக்கு அடுத்த ஆப்பு... டெல்லியை சுற்றி வளைத்த ED: 12 இடங்களில் அதிரடி சோதனை!  - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் மொத்தமாக 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அமலாக்க துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆம் ஆத்மி கட்சி பொருளாளரும் எம்.பியுமான குப்தா வீட்டிலும்,  அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்க்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi ED raid12 places


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->