டெல்லி தேர்தல்..60க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவோம்: சஞ்சய் சிங் உறுதி! - Seithipunal
Seithipunal


நாங்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று டெல்லியில் அரசாங்கத்தை அமைப்போம் என்று ஆம் ஆத்மி கட்சி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். 

 டெல்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8-ந்தேதிஅறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன. டெல்லி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது, பிரதமர் மோடி, பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் டெல்லியில் வந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என்றும்  ஆனால் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய  எம்.பி. சஞ்சய் சிங் ,நாங்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று டெல்லியில் அரசாங்கத்தை அமைப்போம் என்றும்  தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என நம்பிக்கை தெரிவித்தார். 

 

மேலும்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளது என்றும்  அதனால், தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கும் இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை ஆம் ஆத்மி கட்சி தயார் செய்துள்ளது என்று பேசிய  எம்.பி. சஞ்சய் சிங், இந்த குழு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்யும் என இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Elections We will get more than 60 seats: Sanjay Singh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->