மருத்துவ ஆவணங்களை கெஜ்ரிவாலின் மனைவி பார்வையிடலாம் - டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறையில் உள்ள மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், உணவு கட்டுப்பாடும் பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், தனது மருத்துவ ஆவணங்களை தன் மனைவி சுனிதா பார்வையிட அனுமதி கோரியும், தனக்கு துணையாக இருக்க சுனிதாவை அனுமதிக்குமாறும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி விசாரணை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் மருத்துவ ஆவணங்களை சுனிதா பார்வையிட அனுமதி அளித்ததுடன், அந்த ஆவணங்களை சுனிதாவிடம் காண்பிக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், வேறு மருத்துவர்களிடமும் சுதந்திரமாக ஆலோசிக்கவும் சுனிதாவுக்கு அனுமதி அளித்தார். இருப்பினும், சிறையில் மருத்துவர்களுடனான ஆலோசனையின்போது தனக்கு துணையாக இருக்க சுனிதாவை அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi hc permission kejriwal wife visit medicines report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->