பெண் ஊழியரிடம் தவறாக பேசிய நீதிபதியின் வீடியோ வழக்கு - அதிரடி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி ஒருவர் தனது அறையில் சக பெண் ஊழியருடன் தகாத முறையில் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று, இந்தக் காட்சிகளை வெளியிடுவதைத் தடுக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.

அந்த விசாரணையின் போது, "மனுதாரரின் அடையாளத்தை மறைப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்ததால், இந்த வழக்கை யார் தாக்கல் செய்தார்கள் என்பது தெரியவில்லை. 

இந்த வீடியோவில் பாலியல் தன்மை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த வீடியோவை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார். 

இது குறித்து அனைத்து ஆன்லைன் செய்திகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதே சமயத்தில், பெண் ஊழியர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் இந்த வழக்கை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi high court bans video in social media judge abusing female employee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->