Breaking |  உ.பி., பாஜக நிர்வாகிக்கு முன்ஜாமீன்! சென்னை உயர்நீதிமன்றத்தை நாட டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குபடுவது போன்று போலியான வீடியோவை பரப்பிய விவகாரத்தில், உத்திர பிரதேச பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு மார்ச் 20ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கி கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வைரலாகின. 

குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த விவகாரம் பிகார், ஜார்கண்ட் மாநில அரசியலில் பூகம்பமாக வெடித்த நிலையில், இரு மாநிலத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். 

இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக போலீசார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்ற உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அவர் மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பாஜக நிர்வாகியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பிரசாந்த் உம்ராவ் வதந்தி பரப்பியதாக தமிழக காவல்துறையால் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால முன்ஜாமின் வேண்டும் என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்றம், பிரசாந்த் உம்ராவுக்கு மார்ச் 20ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் உள்ளிட்ட நிவாரணம் பெற்றுக்கொள்ளவும் அறிவுத்தியுள்ளது. . 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi High Court grants transit anticipatory bail to BJP leader Prashant Umrao


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->