உண்ணாவிரதப் போராட்டம்: அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

டெல்லிக்கு நீர் வழங்க வேண்டும் என ஹரியானா மாநிலத்தை வலியுறுத்தி டெல்லி பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

இந்த போராட்டம் இன்று ஐந்தாம் நாளாக தொடங்கியுள்ள நிலையில் அதிஷிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக டெல்லி லோக் ஆயுூக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிஷிக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் அதிஷியின் உடல் எடை மற்றும் ரத்த அளவு வேகமாக குறைந்து வருவதாகவும் இது ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்ததாக நேற்று ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

கடந்த ஜூன் 21ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு 65.8 கிலோவாக இருந்தது அதிஷி நான்கு நாட்களில் 63.6 கிலோவாக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Minister Adishi admitted hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->