ஆபத்தில் தலைநகரம்! தீபாவளி முடிந்த கையோடு வெளியான அதிர்ச்சி தகவல்!
Delhi over air pollution today
* பொதுவாக ஒரு பகுதியில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 300 வரை இருந்தால் அந்தப் பகுதி மோசமாகக் கருதப்படுகிறது.
* 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமான நிலையில் உள்ளது எனக் கூறப்படுகிறது.
* 401-450 வரை இருந்தால் அது கடுமையான நிலையாகவும், 450-க்கு மேல் சென்றால் மிகக் கடுமையான நிலையாக கருதப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டங்களால் தலைநகர் டெல்லியில் காலை 8.30 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 400-யை தாண்டி ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டெல்லியின் அலிபூர், ஆனந்த் விஹார், அசோக் விஹார், ஆயா நகர், பவானா, புராரி, மதுரா சாலை, ஐஜிஐ விமான நிலையம், துவாரகா, ஜஹாங்கீர்புரி, ரோகினி, நரேலா, மற்றும் நஜாஃப்கர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் செயலி தெரிவிக்கிறது.
டெல்லி பகுதி மக்கள் சுவாசப் பிரச்னைகள், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். கருத்துக் கணிப்பில் 21,000 பேரில் 69 சதவீதம் பேர் தங்களது குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 62 சதவீதம் பேர் கண் எரிச்சல் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
English Summary
Delhi over air pollution today