டெல்லியில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை! பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை என டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியா, ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை வகித்து வருகிறது. இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இதற்காக டெல்லியின் பிரகதி மைதானம் தயாராகி வருகிறது. முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை ஒட்டி டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi schools and colleges Holidays 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->