மக்களே உஷார்! டிண்டர் சாட், நேருல மீட், பர்த் டே மீட்! அழகியால் ஹோட்டலில் சிக்கிய  இளைஞன்! - Seithipunal
Seithipunal


டிண்டர் ஆப் மூலம் இளைஞர் ஒருவர் பெண்ணிடம் பழகி அவரை நேரில் சந்திப்பதற்காக கஃபேவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் கஃபே உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து அந்த இளைஞரிடம் ரூ.1,21000 ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு வரன்கள் பார்ப்பதற்கு புரோக்கரை நாடிய காலமெல்லாம் போய்விட்டு தற்போது பல ஆப் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது. இதன் மூலம் பலரும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்து வருகின்றனர். 

அதே சமயத்தில், பேசி பழக, அவுட்டிங் போக, காதல் செய்ய டிண்டர் எனும் ஆப் பலராலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு பிடித்தவர்களிடம் பேசும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆப் மூலம் ஒருவருக்கு ஒருவர் பேசி பிடித்த பிறகு நேரில் சந்திப்பது வழக்கம்.

இந்த நிலையில், டெல்லியில் இளைஞர் ஒருவர் இந்த ஆப் மூலம் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் வர்ஷாவின் பிறந்தநாளை கொண்டாட அந்த இளைஞர் முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த கஃபேவில் இருவரும் சாப்பிடுவதற்கு தேவையானவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது திடீரென்று அந்தப் பெண் தனது வீட்டில் பிரச்சனை என்று கூறி உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றார். 

இதன் பின்னர் அந்த இளைஞர் ஆர்டர் செய்தவற்றிற்கு பணம் செலுத்தலாம் என்று பில்லை எடுத்து பார்த்துள்ளார். அதில் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்தவுடன் அந்த இளைஞர் திகைத்துப் போய் நின்றான். அந்த கஃபே உரிமையாளர் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

இதன் பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இளைஞர் பணத்தை கட்டி விட்டு உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று, அங்கு நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த கஃபேவின் உரிமையாளர்களும், அந்தப் பெண் வர்ஷாவும் கூட்டு களவாணி என்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, ஷாதி டாட் காம் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட்டிங்கில் இருந்த அந்த பெண்ணை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இது போன்ற ஆப்களை உபயோகிப்போர் கவனமாக இருக்கும்படி காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Tinder App Forgery lady case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->