பதக்கங்களை கங்கையில் வீச குவிந்த மல்யுத்த வீரர்கள்! தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய விவசாயிகள்! - Seithipunal
Seithipunal



பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் முதல் டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திடீரென தாங்கள் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று மல்யுத்த வீரர்கள் ஐரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முடிவு செய்தது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சாக்ஷி மாலிக், "சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற போது தம் வீட்டு மகள்கள் என அழைத்த பிரதமர் மோடி, இப்போது எங்களின் போராட்டத்தைப் பற்றி கவலைப்படவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வீராங்கனைகள் போராட்டம் பற்றி குடியரசுத் தலைவருக்கும் கவலை இல்லை.

நீதி கேட்டுப் போராடும் எங்களைப் பற்றி கவலைப்படாத பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பதக்கங்களை தர விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, நாட்டுக்காக வெளிநாடுகளில் வெற்றிபெற்று வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீச, உத்தரகாண்ட், ஹரித்வார் கங்கை கரையில் கண்ணீருடன் மல்யுத்த வீரர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் மூழ்கடிப்பதற்காக காத்திருந்த போது, அங்கு வந்த விவசாயிகள் சங்க தலைவர்கள், மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்தினர்.

பின்னர், இந்த பிரச்னைக்கு தீர்வு காண 5 நாட்கள் அவகாசம் கோரி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மல்யுத்த வீரர்கள் தங்களின் முடிவை மாற்றி கொண்டு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Wrestlers Protest may 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->