அங்கிகாரம் இல்லையா? ஒளிபரப்புக்கு விழுந்த தடை! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகளின் நேரலையை அங்கீகரிக்காமல் ஒளிபரப்புவதற்கு ஆன்லைன் தளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்குதளத்தின் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் நோவி டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அங்கீகரிக்காமல் ஒளிபரப்புவதற்கு  தடை விதித்துள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ள உலகக் கோப்பை போன்ற பல்வேறு ஐசிசி நிகழ்வுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உட்பட பிரத்யேக ஊடக உரிமைகள் தங்களுக்கு இருப்பதாக வழக்கு தொடர்ந்த நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC bans ICC Cricket World Cup unauthorized telecast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->