முதல் முறையாக கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi Delhi Christmas
தலைநகர் டெல்லியில் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழா புதுடெல்லியில் அமைந்துள்ள சிபிசிஐ மையத்தில் நடைபெற உள்ளது. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன, இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்பது இதன் சிறப்பாகும்.
மேலும், இந்நிகழ்வில் பிஷப்கள், கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் சந்தித்து உரையாட உள்ளார்.
குறிப்பு : இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944ல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடனும் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.