டெல்லி முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. குஷியில் ஆம் ஆத்மி தரப்பு.!!
DelhiHC refused case against aravind kejriwal
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறை கேட்டு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆக செயல்பட முடியாது எனவும், டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் நீதித்துறையின் வரம்புக்குள் வராது என்பதாலும் டெல்லி துணைநிலை ஆளுநர் குடியரசு தலைவர் ஆகியோரது அதிகாரங்களுக்கு உட்பட்டது என்பதாலும் மனுவை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவால் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
English Summary
DelhiHC refused case against aravind kejriwal