கர்நாடகா : வாக்களிக்க வந்த பெண்ணுக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா : வாக்களிக்க வந்த பெண்ணுக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்த சம்பவம்.!

நேற்று  தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரைக்கும் மிகவும் விறுவிறுப்பாகநடைபெற்று முடிவடைந்தது. 

இந்தத் தேர்தலில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றனர். அந்த வகையில், பல்லாரியின் குர்லகிண்டி கிராமத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய வாக்கினைச் செலுத்துவதற்காக வந்துள்ளார்.

அப்போது அவருக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வலியால் கதறி அழுதுள்ளார். உடனே வாக்களிக்க வந்த சக பெண்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரிகள் என்று அனைவரும் அந்த பெண்ணிற்கு உதவியுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு வாக்குச் சாவடியிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.

அதில் தாயையும், சேயையும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்களிக்க வந்த பெண் ஒருவருக்கு வாக்குச் சாவடியிலேயே குழந்தை பிறந்த சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delivery to woman in voting booth at karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->