தொடரும் உயிரிழப்புகள் - அதிர்ச்சியில் அய்யப்ப பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு, எரிமேலி பகுதியில் இருந்து சன்னிதானம் செல்ல போலீஸார் அனுமதி மறுத்ததால், ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சபரிமலையில் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. 

அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இந்த சூழலில் இன்று புல்லுமேடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த கொல்லத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரது உடலை மீட்டு, குமுளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், ராஜேஷுக்கு உடல்நல குறைபாடுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, ராஜேஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees death troll increase in sabarimalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->