3 மணி நேரம் தான் கெடு.. "விமான நிறுவனங்களுக்கு கடிவாளம்'' போட்ட மத்திய அரசு!! குஷியில் விமான பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நிலவும் பனிமூட்டம், தென்னிந்தியாவில் போகி பண்டிகை மற்றும் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்வதோடு காலதாமதமும் ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் நிலவும் அதிக பனிமூட்டம் காரணமாக விமானங்கள் இயக்க முடியாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று சுமார் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கடுப்பான விமான பயணிகள் விமான நிலைய கவுண்டர்களின் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் போகி பண்டிகையால் கடும் பனிமூட்டம் மற்றும் புகைமூட்டம் காரணமாக பல விமானங்கள் காலதாமதமாக தரையிறக்கப்பட்டன ஓடுதாவும் தெரியாத அளவிற்கு சாலைகளை புகை மண்டலமும் பனிமூட்டமும் சூழ்ந்ததால் சிங்கப்பூர் லண்டன் என பல்வேறு நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிருக்க முடியாமல் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் இண்டிகோ விமானம் பல மணி நேரம் காலதாமதம் ஆனதால் பயணி ஒருவர் விமானியை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் விமானங்களை ரத்து செய்வதற்கு புதிய விதி முறையை விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி புதிய வழிகாட்டுதல்களை சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மூன்று மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆகும் பயணங்களை தானாக ரத்து செய்ய வேண்டும் என அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dgca release new rules for flight cancellations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->