ராகுல் காந்தியால் செருப்பு இல்லாமல் 13 ஆண்டுகளாக நடக்கும் நபர்.!  - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தன்னுடைய பாத யாத்திரையை நடத்தினார். இதில் அந்தந்த மாநிலங்களிலும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். 

இந்த பாத யாத்திரையில் கையில் தேசிய கொடியை ஏந்தியது போல அவருடன் தினேஷ் சர்மா என்ற நபர் முழு பாதயாத்திரையிலும் கலந்து கொண்டார். இவர் காங்கிரஸ் தொண்டர்களால் பண்டிட்ஜி என்று அழைக்கப்படக்கூடிய நபர். 

இவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் செருப்பு அணியாமல் கலந்து கொண்டு வருகின்றார். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தினேஷ் சர்மா செருப்பு அணிவதில்லை. இதற்கு காரணமாக அவர் கூறுவது ராகுல் காந்தி பிரதமர் ஆகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்பதுதான். 

எனவே இதுவரை 13 ஆண்டுகளாக சிறப்பு இல்லாமல் தினேஷ் சர்மா வெறும் காலில் நடந்து வருகின்றார். ராகுல் காந்தியுடன் பாதயாத்திரைகளும் அவர் செருப்பு இல்லாமல் தான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh sharma In Rahul Ganthi Yatra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->