வாக்குப்பெட்டிகளை உடைக்கும் மாவட்ட ஆட்சியர்: காங்கிரஸ் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து தபால் வாக்கு பெட்டிகளை திறக்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

கடந்த 17ஆம் தேதி மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனை அடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குபெட்டிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் உள்ளது. 

இந்நிலையில் பாலகாட் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்ட அறைக்குள் புகுந்த மாவட்ட ஆட்சியர் தபால் வாக்கு பெட்டிகளை திறக்கும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

மேலும் அதில், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அறிவிக்காமல் மாவட்ட ஆட்சியர் வாக்கு பேட்டி அறைக்குள் நுழைந்து தபால் வாக்கு பெட்டிகளை திறந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. 

இதனை தொடர்ந்து அனைத்து காங்கிரஸ் தேர்தல் பணியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம், மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Collector breaking ballot boxes 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->