தமிழகம் கேட்கும் தண்ணீரை எல்லாம் கொடுக்க முடியாது.!! கர்நாடக அமைச்சர் திட்ட வட்டம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக அணையிலிருந்து தமிழகம் கேட்கும் அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை எங்களால் திறந்து முடியாத சூழல் உள்ளது.

இதன் காரணமாக சிறிதளவு நீரையும் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டு உள்ளோம். கர்நாடகா காவிரி நதியில் அமைந்துள்ள அணைகளில் 55 டிஎம்சி நீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. தமிழகம் கேட்பதையெல்லாம் எங்களால் கொடுக்க முடியாது" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பதற்கு எதிராக கர்நாடக மாநில பாஜக நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DKSivakumar said that we cannot release water as much as TamilNadu asks


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->