கர்நாடகாவில் தண்ணீரே இல்லை! டெல்லியில் கண்ணீர் வடிக்கும் டி.கே சிவக்குமார்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே சிவகுமார் டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் வழக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் "கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ், ஹேமாவதி ஆகிய அணைகளில் உள்ள நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இன்னும் இரண்டு மாதங்களில் கர்நாடக மாநிலத்திற்கு குடிநீருக்கு கூட தண்ணீர் இருக்காது. இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் நேரில் வந்து பார்க்கும்படி அறிவுறுத்த உள்ளோம். மேகதாதுவில் அணையில் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. இதற்காக தான் மேகதாதில் அணை கட்டிய ஆக வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மேகதாவில் அணைக்கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டால், அது கர்நாடகா விவசாயிகளை பாதிக்கும். தமிழக விவசாயிகள் கர்நாடக விவசாயிகளின் எண்ண ஓட்டத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.

எனவே தான் மேகதாது அணை கட்டப்பட்டால் அது தமிழக விவசாயிகளுக்கும் நலன் பயக்கும் என கூறுகிறோம்" என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் டி.கே சிவகுமார் தலைமையிலான இந்த குழுவினர் நாளை கர்நாடக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர்களையும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு கர்நாடகா அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்திற்கு திறந்து விடப்படும் 5000 கன அடி நீரை தடுத்து நிறுத்தும் நோக்கில் டெல்லியில் டி.கே சிவகுமார் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DKSivakumarsaid that there is no water in Karnataka dams


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->