கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் - திமுக எம்.பிகளுக்கு கொறடா உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அவையில் அதானி விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால், நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார். அதாவது, முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கொறடா பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp must come to parliment korada order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->