பாஜக எம்.பி மீதான பாலியல் குற்றச்சாட்டு.. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..!! - Seithipunal
Seithipunal


இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பிஷன் மற்றும் சில பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கூறி மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு பாஜக எம்.பி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என டெல்லி காவல்துறை உறுதி அளித்து இருந்தது.

அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தகவலை டெல்லி மாநகர் காவல்துறை ஆணையர் பிரணவ் தயாள் உறுதி செய்துள்ளார். 

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK supports women wrestlers protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->