உத்தரகாண்டில் நெகிழ்ச்சி: நோயாளியின் உயிரைக் காப்பாற்ற இரத்தம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிம் டேராடூன் நகரில் உள்ள டூன் மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக ஆழமுள்ள குழி ஒன்றில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நபர் ஒருவர் சேர்க்கப்பட்டார். 

இதையடுத்து 3 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் போதிய அளவுக்கு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளி போனது. 

இந்நிலையில் அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க முன் வந்தார். ஆனால், சில காரணங்களால் மகளால் ரத்தம் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஷஷாங் சிங் ரத்தம் கொடுக்க முடிவு செய்து ரத்த தானம் செய்தார்.

பின்பு அவரே அறுவை சிகிச்சை செய்து அந்நபரை காப்பாற்றியுள்ளார். இதற்காக ஜிடிஎம்சி முதல்வர் டாக்டர் அசுதோஷ் சயனாவ் மற்றும் பலர் டாக்டர் ஷஷாங்கைப் பாராட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor donates blood to save patient life before surgery in uttarakhand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->