மருத்துவரை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற கொடூரம் - வைரலாகும் வீடியோ!
doctor hit by car and dragged in telungana vedio viral
மருத்துவரை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற கொடூரம் - வைரலாகும் வீடியோ!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா பகுதியில் மானாசா தேவி வளாகத்தில் வசிப்பவர் பிரபல மருத்துவர் ககன். இவர் தனது மகனை டியூசனுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து செக்டர் 8 பஞ்ச்குலா சந்திப்பு பகுதியில் மருத்துவர் ககனின் காரை மற்றொரு கார் முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அந்த கார் எதிர்பாராதவிதமாக மருத்துவர் ககன் வாகனத்தின் மீது மோதியது. இதனால் ஆத்திரமடைந்த ககன் அந்த காரை நிறுத்தி கீழே இறங்கிச் சென்று அதன் ஓட்டுநரை கண்டித்துள்ளார்.
அப்போது, திடீரென அந்த காரின் ஓட்டுநர், மருத்துவர் ககன் மீது காரைக் கொண்டு மோதியதில், ககன் உயிர் பிழைப்பதற்காக காரின் பேனட்டைக் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
ஆனால், அந்தக் காரின் ஓட்டுநர் அவரை பேனட்டில் இருந்து இறக்கி விடாமல் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் காரில் இருந்து ககன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் ககனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று மருத்துவர் ககன் மீது கார் மோதி இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர் ககன் அளித்த புகாரின் பேரில், போலீசார் மருத்துவர் மீது மோதிய கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
doctor hit by car and dragged in telungana vedio viral