ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் படித்தால் நிறைய பாதிப்பு.. இந்திய நிபுணர் கருத்து.!
Doctor naresh Rohit speech about hindhi MBBS
நாட்டிலேயே முதல் முறையாக ஹிந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தியில் மருத்துவ கல்வி பயிலும் முறை தொடங்கப்பட உள்ளது. இதனை மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
13 அரசு மருதுவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடலியல், உயிர் வேதியியல், உடற்கூறியல் ஆகிய 3 பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் இந்தியில் மருத்துவ படிப்பு படித்தால் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இந்திய மருத்துவ அகாடமிகள் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் ரோகித் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
இந்தியா பழமொழிகள் பேசும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இத்தகைய பின்னணி கொண்ட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க வருவார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில மாணவர்கள் சரளமாக ஹிந்தியில் பேசும் திறன் கொண்டிருக்க மாட்டார்கள் இவர்களுக்கு இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எம்பிபிஎஸ் என்பது சாதாரண அடிப்படை பட்டப்படிப்பு அல்ல உயிரைக் காப்பாற்றும் படிப்பாகும். அதோபோல், மருத்துவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பணியாற்ற முடியாது அவர்கள் பிற வாய்ப்புகளை தேட விரும்புவார்கள். ஹிந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே போய் மேல் படிப்பு படிக்கவோ ஆராய்ச்சி நடத்தவோ முடியாது.
மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள் வழிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும் அவை ஆங்கிலத்தில் தான் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. மேலும், எம்பிபிஎஸ் படித்து முடித்தவுடன் ஹிந்தியில் உயர் படிப்பு படிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Doctor naresh Rohit speech about hindhi MBBS