சாதி தீண்டாமை! தலித் குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த ஆதிக்கசாதியினர்! 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதி  இளைஞர்களை காப்பாற்றுவதற்காக 50 தலித் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் உள்ள யாத்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாப்பரகா கிராமத்தில் தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடையில் பொருட்களை வாங்குவோ அல்லது பொது இடங்களில் நடமாடவோ அல்லது கோவிலில் வழிபாடு செய்யவோ கூடாது என அப்பகுதி ஆதிக்க ஜாதியினர் தடை விதித்து உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் தலித் சமுதாயத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக உள்ளநிலையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தில் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க ஜாதியினர்  வாலிபர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குமாறு சிறுமியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.  

புகாரை வாபஸ் வாங்க மறத்ததால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து யாத்கிர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதிக்க ஜாதியினரை இந்த மனிதாபிமானமற்ற செயலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dominant castes who pushed Dalit families out of the village


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->