கோயில்களில் இனி இந்த ஆடைகளை அணியக் கூடாது - கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதற்கேற்றார் போல் பொதுமக்களும் மாறி வருகின்றனர். அந்த வகையில் மனிதர்களின் ஆடை அணிகலன்களும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அணிந்து வருகின்றனர்.

ஆனால், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் வகையில் சில குறிப்பிட்ட இடங்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி,  கோயில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜார்க்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், குட்டை பாவாடை, கிழிந்த ஜீன்ஸ் போன்ற அரைகுறை ஆடைகளை அணிந்து வந்தால் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dress code in rajasthan Jharkhand mahadhev temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->