தினமும் இம்சை படுத்திய மனைவி, மாமியார்; டிரைவர் தூக்கிட்டு தற்கொலை..!
Driver commits suicide by hanging himself after being tortured by his wife and mother in law every day
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் கவுதம் நகரை சேர்ந்தவர் 25 வயதான அபிஷேக் பசாலி. தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தவர். இவர் ஐஸ்பக் பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து கடந்த 04 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அபிஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டைவந்துள்ளது. அப்போது மனைவி மற்றும் மாமியார் சேர்ந்து அவருக்கு மனரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர். அத்துடன், கணவன் தன்னை கொடுமைபடுத்துவதாக அபிஷேக் மீது அவரது மனைவி ஏற்கனவே புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையில், அபிஷேக்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று முன் தினம் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அபிஷேக் தனது மனைவி மற்றும் குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுள்ளார். பின்னர், தன் வீட்டிற்கு சென்று அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த போலீசார் அபிஷேக்கின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அபிஷேக்கின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Driver commits suicide by hanging himself after being tortured by his wife and mother in law every day